ஏராளமான பெண் சிசுக் கொலைகளை அரங்கேற்றி இருப்பதாக ஸ்கேன் சென்டர் மீது எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலினத் தேர்வு தடுப்புச் சட்டம் 1994-ன்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்வது குற்றம். அதையும் மீறி முயற்சித்தால் கடும் தண்டனை வழங்கப்படும். பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அதனை கொன்றுவிடும் எண்ணம் இன்னும் அணையா தீயாய் சில இடங்களில் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டர் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இங்கு 100க்கும் அதிகமான கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக அதிகாரிகள் கூறுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.