திருப்பதியில் அமைந்துள்ள அலமேலும் மங்காபுரம் பத்மாவதி திருகோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் நிகழ்ச்சியை தொடர்ந்து புஷ்ப யாகம் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நிகழ்ச்சி நடக்கும். அந்த வகையில் நேற்று முன் தினம் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.
அதில் ஏற்பட்ட நிறை குறைகளை சரிசெய்வதற்காக வருடாந்திர புஷ்ப யாகத்த்தை தேவஸ்தானம் நிர்வாகம் நடத்தி வருகின்றது. அந்த வகையில் வருடாந்திர பிரமோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைந்தததை தொடர்ந்து, நேற்றும் மதியம் பத்மாவதி தாயர் உற்வருக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
3டன் மலர்கள்:
தாயாருக்கு பால், தயிர், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உட்பட பல பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தாயாருக்கு தீப, தூப ஆராதனை செய்யப்பட்டு மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது.