நடப்பு ஆண்டு நிறைவுறும் தருவாயில் அடுத்த வரும் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் விடுமுறை நாட்களும் பண்டிகைகளும் எப்போது வருகின்றன என்ற எதிர்பார்ப்பும் எல்லுாரிடமும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் தான் வருகின்ற 2020 ஆம் ஆண்டு, குறிப்பாக இந்துக்களால் பெரும்பான்மையாகக் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்பது பற்றி மிக விளக்கமாகப் பார்க்கலாம்.
ஜனவரி மாத பண்டிகைகள்
ஜனவரி மாதம் ஆண்டு தொடக்கத்தின் முதல் மாதம். இந்த மாதம் தொடங்குகிறதைப் பொருத்துதான் அந்த ஆண்டு சிறப்பாகச் செல்லும் என்று நினைப்பார்கள். அதனால் அந்த மாதத்தின் முதல் நாள் ஏராளமான பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும். அதுதவிர அந்த மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜனவரி 6 - தேதி பெருமாளுக்கு விசேஷமான நாளான ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. இது மோட்சத்திற்குரிய நாளாகக் கருதப்படும். சிறப்பு வாய்ந்த பெருமாள் கோவில்களில் வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் வருகிற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஜனவரி 14 - போகிப்பண்டிகை
ஜனவரி 15 - தைப்பொங்கள் - தை முதல் நாள்
ஜனவரி 16 - மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - காணும் பொங்கல்
ஜனவரி 24 - தை அமாவாசை